நேவி போலீசாருக்கு ஒத்திகை பயிற்சி
தொண்டி,: தொண்டியில் நேவி கேம்ப் உள்ளது. இங்கு பணியாற்றும் போலீசாருக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக திருவாடானை தீயணைப்புத்துறை சார்பில் போலி ஒத்திகை பயிற்சி நடந்தது.நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் தீ விபத்து ஏற்படும் போது பாதுகாத்து கொள்வது, உட்பட பல்வேறு செயல்முறை விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது. சிறப்பு காவல்படை எஸ்.ஐ., கென்னடி மற்றும் 20 போலீசார் கலந்து கொண்டனர்.