உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கொலை வழக்கில் அனைவரையும் கைது செய்வதற்கு உறவினர்கள் வலியுறுத்தல்

கொலை வழக்கில் அனைவரையும் கைது செய்வதற்கு உறவினர்கள் வலியுறுத்தல்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தைச் சேர்ந்த செய்யது அப்துல்லாவை கடத்தி கொலை செய்து கடற்கரையில் வீசிய வழக்கில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் வலியுறுத்தினர்.ராமநாதபுரம் பாரதிநகரைச் சேர்ந்த கமால் முஸ்தபா மனைவி சீனிபாத்திமா அவரது உறவினர்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதில் தனது மகன் செய்யது அப்துல்லாவை மே 17ல் வீட்டில் இருந்து கடத்திச் சென்று கொலை செய்து திருப்புல்லாணி கடற்கரையில் வீசியுள்ளனர். இவ்வழக்கில் தொடர்புள்ள அனைத்து நபர்கள் குறித்து புகார் அளித்தும் சிலரை மட்டுமே கைது செய்துள்ளனர். எனவே அனைவரையும் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மகன் இறப்பால் மிகவும் சிரமப்படுகிறோம்.பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு அரசு நிவாரண நிதி வழங்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பரிந்துரை செய்ய வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை