கீழக்கரையில் காலை நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
கீழக்கரை: கீழக்கரை நகர் பகுதி வழியாக கடற்கரை சாலையில் பழைய பஸ் ஸ்டாண்ட் உள்ளது. ராமநாதபுரத்தில் இருந்து வரக்கூடிய டவுன் பஸ் எண்: 1, 1-ஏ, 10, 10-ஏ உள்ளிட்ட பஸ்கள் கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை வழியாக கடற்கரை பஸ் ஸ்டாண்ட் வரை செல்கின்றன.இந்நிலையில் காலை 7:00 முதல் 8:00 மணிக்குள் குறிப்பிட்ட நேரத்தில் அரசு டவுன் பஸ் இல்லாததால் ராமநாதபுரத்தில் உள்ள கல்லுாரிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.கீழக்கரை த.மா.கா., நகர் தலைவர் கணேசமூர்த்தி கூறுகையில், பள்ளி மாணவர்களின் நலன் கருதி கீழக்கரை கடற்கரை அருகே உள்ள பஸ் ஸ்டாண்ட் வரை கூடுதல் டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வருகின்றனர். எனவே குறைகளை நிவர்த்தி செய்ய போக்குவரத்து கழக அதிகாரிகள் முன் வர வேண்டும் என்றார்.