மேலும் செய்திகள்
பிரமலைக்கள்ளர் ஐம்பெரும் விழா
19-Nov-2024
போராடி தோல்வி அடைந்த India
11-Nov-2024
கடலாடி; தமிழ்நாடு சீர் மரபினர் நல வாரிய புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் மாவட்டம் முழுவதும் தற்போது நடக்கிறது. இதில் அடையாள அட்டையை நிரந்தர அடையாள அட்டையாக வழங்க கோரிக்கை எழுந்துள்ளது. கடலாடி சீர் மரபினர் நலவாரிய உறுப்பினர் முத்து கூறியதாவது:கடந்த கொரோனா காலத்தில் தமிழக அரசால் அடையாள அட்டையின்படி ரூ.2000 வழங்கப்பட்டது. இந்த அடையாள அட்டையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டியது உள்ளது. கொரோனா காலத்தில் புதுப்பிக்கும் தேதி முடிவடைந்ததால் என்னால் புதுப்பிக்க இயலவில்லை. இந்நிலையில் தற்போது கலெக்டர் அலுவலகத்தில் புதுப்பிக்க கொடுத்து பல மாதங்களாகியும் புதுப்பித்து தரவில்லை. சீர்மரபினர் நலவாரிய அட்டை காலாவதி ஆகிவிட்டது. என்னை உறுப்பினராய் தகுதி இழக்க செய்து விடுவார்களோ என்ற நிலை உள்ளது.எனவே கட்டடத் தொழிலாளர்கள் நலவாரிய அடையாள அட்டை பயன்படுத்துவது போன்று நிரந்தர அடையாள அட்டை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
19-Nov-2024
11-Nov-2024