உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பக்தர்களின் வசதிக்கு குடிநீர் தொட்டி அமைக்க கோரிக்கை

பக்தர்களின் வசதிக்கு குடிநீர் தொட்டி அமைக்க கோரிக்கை

திருப்புல்லாணி: கோடை காலத்தில் கடும் வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும், பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில், உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில், சேதுக்கரை சேது பந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களில் பக்தர்கள் பயன்படுத்தும் வகையில் குடிநீர் தொட்டிகளை அமைப்பதற்கு ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பக்தர்கள் கூறியதாவது:தற்போது கோடை காலம் துவங்கி உள்ளதால் பள்ளி விடுமுறை நாட்களில் அதிகளவு வெளி மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் பல்வேறு சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக திருப்புல்லாணி, சேதுக்கரை, உத்தரகோசமங்கை உள்ளிட்ட கோயில்களுக்கு வருவார்கள்.பக்தர்களின் வசதிக்காக குடிநீர் தொட்டிகளை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் வைப்பதற்கு நடவடிக்கை வேண்டும். குடிநீரை நன்னீராக்கும் ஆர்.ஓ.,பிளான்ட் இயந்திரங்களை பாதுகாப்பான முறையில் நிறுவ வேண்டும்.வெயிலின் தாக்கத்தால் பிரகாரப் பகுதிகளில் பக்தர்களின் வசதிக்காக விரிப்புகள் அல்லது சூடுகளை தாங்கக்கூடிய வெள்ளை நிற வண்ணங்களை பூச வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ