உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கிராசபை கூட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை

கிராசபை கூட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை

ராமநாதபுரம்; திருப்புல்லாணி ஒன்றியம் மாயாகுளம் ஊராட்சியில் ஆக.,15ல் போதுமான மக்கள் இன்றி நடந்த கிராமசபை கூட்டம் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது. அக்கட்சியின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் அற்புதக்குமார் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தார். அதில் கூறி யிருப்பதாவது: மாயாகுளம் ஊராட்சியில் 8000க்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஆக.,15 சுதந்திர தினத்தன்று நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் 20 பேருக்கும் குறைவான மக்களே பங்கேற்றனர். தீர்மான புத்தகம், நிதி வருவாய் என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் தரவில்லை. ஆகையால் அந்த கிராம சபை கூட்டத்தை ரத்து செய்து மற்றொரு நாளில் கலெக்டர் தலைமையில் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை