உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / எஸ்.பி.பட்டினத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்த கோரிக்கை 

எஸ்.பி.பட்டினத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்த கோரிக்கை 

தொண்டி: தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்த அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தொண்டி அருகே உள்ளது எஸ்.பி.பட்டினம் ஊராட்சி. இங்கு 2000 குடியிருப்புகள் உள்ளன. இங்கு அடிப்படை வசதிகள் உள்ளிட்ட, பல்வேறு பிரச்னைகளை இப்பகுதி மக்கள் சந்தித்து வருவதால் இங்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்த வலியுறுத்தபட்டுள்ளது. இது குறித்து எஸ்.பி.பட்டினம் சமூக ஆர்வலர்கள் சேவை சங்க தலைவர் ஜலால்காசிம் கூறியதாவது- இங்கு அடிப்படை வசதிகள் இல்லை. உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனுக்கள் அளித்து பயன்பெறலாம் என நினைத்தோம். ஆனால் செப்.16ல் எஸ்.பி.பட்டினம், புல்லக்கடம்பன், கலியநகரி ஆகிய ஊராட்சிகளுக்கு கலியநகரி சேவை மையத்தில் நடப்பதாக அறிவிக்கபட்டுள்ளது. இப்பகுதியை சேர்ந்த பெண்கள் 2 கி.மீ.துாரத்தில் உள்ள கலியநகரிக்கு செல்வதில் சிரமம் ஏற்படும். மேலும் எஸ்.பி.பட்டினத்தில் போக்குவரத்து வசதி உள்ளது. திருமணமகால்கள் இருப்பதால் அதிகாரிகளுக்கு இப்பகுதி மக்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். எனவே உங்களுடன் ஸ்டாலின் முகாம் எஸ்.பி.பட்டினத்தில் தனியாக நடத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ