உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தார்ரோட்டிற்கு பயன்படும் பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்த கோரிக்கை  

தார்ரோட்டிற்கு பயன்படும் பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்த கோரிக்கை  

திருவாடானை: திருவாடானை அருகே கல்லுார் ஊராட்சியில் பயன்பாடின்றி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அரைக்கும் இயந்திரம் செயல்படுகிறது. இத்திட்டத்தை மற்ற ஊராட்சிகளிலும் செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவாடானை அருகே கல்லுார் ஊராட்சியில் சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் செலவில் குப்பை அரைக்கும் இயந்திரம் அமைக்கபட்டு செயல்பட்டு வருகிறது. ஊராட்சிகளில் குப்பை இல்லாத துாய்மையான சுகாதாரமான கிராமங்களாக மாற்றும் முயற்சியாக இத் திட்டம் செயல்படுத்தபடுகிறது. திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 47 ஊராட்சிகளில் கல்லுார் ஊராட்சியில் முதல்கட்டமாக இத் திட்டம் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து சேகரிக்கபடும் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து, மக்காத பிளாஸ்டிக் கழிவு பொருட்களை இயந்திரம் மூலம் அரைத்து ரோடு பணிகளுக்கு பயன்படுத்தபடுகிறது. நாளுக்குநாள் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எனவே திருவாடானை, பெரியகீரமங்கலம், எஸ்.பி.பட்டினம், மங்களக்குடி, முள்ளிமுனை, முகிழ்த்தகம் உள்ளிட்ட அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்திட வேண்டும் என மக்கள் கூறினர். இது குறித்து திருவாடானை பி.டி.ஓ., (ஊராட்சி) ஆரோக்கியமேரிசாராள் கூறியதாவது:-- குப்பையை அரைத்து ரூ.10க்கு விற்கப்படுகிறது. மதிப்பீட்டபட்ட பொருளாக தார்ரோடுக்கு பயன்படுத்துவதால் ரோடு தரமானதாக அமையும். முதல் கட்டமாக கல்லுார் ஊராட்சியில் செயல்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை மூலம் இயந்திரங்கள் வழங்கும் பட்சத்தில் மற்ற ஊராட்சிகளிலும் செயல்படுத்தபடும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை