உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புதுப்பட்டிணத்திற்கு காவிரி குடிநீர் வழங்க கோரிக்கை

புதுப்பட்டிணத்திற்கு காவிரி குடிநீர் வழங்க கோரிக்கை

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே புதுப்பட்டிணம் கிராமத்தில் தினந்தோறும் காவிரி குடிநீர் வழங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.முதுகுளத்துார் அருகே செல்லுார் ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்பட்டிணம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கிராமத்தில் குடிநீர் குழாய் மூலம் காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாரத்திற்கு ஒருமுறை மட்டும் குடிநீர் வருவதால் குடிநீருக்காக மக்கள் குடத்துடன் காத்திருக்கும் நிலை உள்ளது. மற்ற நாட்களில் டிராக்டர் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். மக்கள் குடிநீர் பிடிப்பதற்காகவே அத்தியாவசிய வேலைக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே மக்களின் நலன்கருதி புதுப்பட்டிணம் கிராமத்திற்கு தினந்தோறும் முறையாக காவிரி குடிநீர் வழங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ