மேலும் செய்திகள்
ஆர்.எஸ்.மங்கலத்தில் மீன் சந்தை அமைக்க கோரிக்கை
24-Sep-2024
ஆர்.எஸ்.மங்கலம்: மழைக்காலம் துவங்கி உள்ளதால் ஆர்.எஸ். மங்கலம் டவுன் பகுதி வழியாக செல்லும் கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் இருந்து விவசாய நிலங்களுக்கு செல்லும் மூன்று பாசன வாய்க்கால்கள் ஆர்.எஸ்.மங்கலம் டவுன், குடியிருப்பு பகுதிகள் வழியாக செல்கின்றன. இந்த பாசன வாய்க்கால்களில் பெரும்பாலும் குடியிருப்பு பகுதி கழிவு நீர் செல்லும் வாய்க்காலாகத்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலான பகுதியில் கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து புதர் மண்டி மண்மேடாகி அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.கடந்தாண்டு பருவமழையின் போது கழிவு நீர் கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்பால் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கியது. எனவே தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய்களில் கழிவுகள் மற்றும் புதரை அகற்றி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
24-Sep-2024