வயல்களில் இரைதேடும் மயில் வேட்டையை தடுக்க கோரிக்கை
திருவாடானை: திருவாடானையில் உள்ள கண்மாய்களில் மயில்கள் கூட்டமாக வசிக்கிறது. சிலர் இரவில் வேட்டையாடுகின்றனர். இதனை கண்காணித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வயல்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் எவ்வித அச்சமும் இன்றி சுற்றி திரிவதால் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை பார்த்து ரசிக்கின்றனர். இப்பகுதியில் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அனைத்து வயல்களும் பசுமையாக காட்சியளிக்கிறது. செங்கமடை கிராமத்தில் வயல்களில் மயில்கள் இரைதேடின. அஞ்சுகோட்டை கண்மாயில் மயில்கள் கூட்டமாக வசிக்கிறது. சிலர் இரவில் வேட்டையாடுகின்றனர். வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.