உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொடக்கப்பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கோரிக்கை

தொடக்கப்பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கோரிக்கை

கீழக்கரை : கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட மறவர் தெருவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 40 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் செயல்படும் நிலையில் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்த கோரிக்கை எழுந்துள்ளது.கீழக்கரை நகராட்சி பகுதியில் 100 சதவீதம் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்படுகின்றன. அரசு தொடக்கப்பள்ளியில் இருந்து நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தொடர் கோரிக்கை விடுக்கின்றனர். கீழக்கரை தன்னார்வலர் செல்வகணேச பிரபு கூறியதாவது: கீழக்கரை நகராட்சியில் பெரும்பாலும் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அதிகம் உள்ள நிலையில் அரசு பள்ளிகளில் நீட் தேர்வு உள்ளிட்ட போட்டி தேர்வுகளில் பங்கேற்பதற்கான சூழ்நிலை இல்லாத நிலை தொடர்கிறது.தமிழ் வழி கல்வி மூலம் அரசு பள்ளியில் படிக்கும் சலுகை இப்பகுதியில் இல்லை. எனவே கீழக்கரை மறவர் தெருவில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் கூடுதல் கட்டடம் கட்டவும், 6 முதல் 8ம் வகுப்பு வரை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தவும், அதற்கான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய இடம் கீழக்கரை பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் உள்ளது.எனவே அவற்றை உரிய முறையில் ஆய்வு செய்து பொதுமக்களின் கல்விக்கான முன்னேற்பாட்டிற்கு கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ