வி.ஏ.ஓ., பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வர கூட்டத்தில் தீர்மானம்
முதுகுளத்துார்; முதுகுளத்துாரில் தமிழ்நாடு வி.ஏ.ஓ., சங்க ராமநாதபுரம் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கருப்பையா தலைமை வகித்தார். செயலாளர் ஜெகநாத பூபதி, பொருளாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் அசோக்குமார் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். அப்போது வி.ஏ.ஓ.,க்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் கொண்டுவர வேண்டும். மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.ஆக. 23ல் நடை பெறும் கோரிக்கை மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் வட்டார தலைவர்கள் ராஜேஸ் வரன், சிவக்குமார் கவுரவ தலைவர் நம்பு ராஜேஷ் உட்பட வி.ஏ.ஓ.,க்கள் பலர் கலந்து கொண்டனர். வட்ட பொருளாளர் மணிமூர்த்தி நன்றி கூறினார்.