உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நெற்பயிரில் புகையான் நோய் தாக்குதல் அதிகம்

நெற்பயிரில் புகையான் நோய் தாக்குதல் அதிகம்

திருவாடானை : திருவாடானை அருகே திருவெற்றியூர், குளத்துார், அரும்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் பிபிடி 5204 என்ற டீலக்ஸ் பொன்னி பயிரிட்டுள்ளனர். பயிர்கள் வளர்ந்துள்ள நிலையில் பெரும்பாலான வயல்களில் புகையான நோய் தாக்குதலால் பயிர்கள் கருகி வருகிறது.திருவெற்றியூர் விவசாயிகள் கூறுகையில், ஏற்கனவே இரு முறை மருந்து தெளிக்கப்பட்டது. தற்போது அறுவடைக்கு தயாராக இருப்பதால் மீண்டும் மருந்து தெளிக்க முடியாது. எனவே வேளாண் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை