உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / எச்சரிக்கை பலகையின்றி விபத்து ஏற்படும் அபாயம்

எச்சரிக்கை பலகையின்றி விபத்து ஏற்படும் அபாயம்

முதுகுளத்துார் : முதுகுளத்துார்- பரமக்குடி ரோட்டில் வரத்து கால்வாயை கடந்து செல்வதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு அமைத்த சிறிய பாலத்தில் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். இதையடுத்து போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பாலத்தின் அருகில் புதிய பாலம் கட்டும் பணி 6 மாதங்களுக்கும் மேல் நடக்கிறது.இதையடுத்து ரோட்டை இணைப்பதற்காக புதிதாக செல்வநாயகபுரம் விலக்கு ரோட்டில் ரோடு அகலப்படுத்தும் பணி நடக்கிறது. இதற்காக அபிராமம் செல்வநாயகபுரம் ரோட்டில் தடுப்பு சுவர் கட்டப்படும் நிலையில் எச்சரிக்கை பலகை இல்லை.இதனால் எதிரில் வரும் வாகனங்களும் சிரமப்படுகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி எச்சரிக்கை பலகை வைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி