/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பன் பாலத்தில் சீமைக் கருவேல மரங்களால் விரிசல் ஏற்படும் அபாயம்
பாம்பன் பாலத்தில் சீமைக் கருவேல மரங்களால் விரிசல் ஏற்படும் அபாயம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலம் நுழைவில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் பாலத்தில் விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது. பாம்பன் கடலில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை பாலம் வழியாக தினமும் ஏராளமான வாகனங்களில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். பாலத்தின் இருபுறம் நுழைவிலும் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இவற்றை அகற்ற மக்கள் பலமுறை வலியுறுத்தியும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பாலத்தில் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் பாலத்தின் பக்கவாட்டில் கடல் அலை அரிப்பு தடுக்கும் கற்களை பெயர்த்து விரிசல் ஏற்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் பாலத்தில் விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.