உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முதுகுளத்துார் அருகே செயல்படாத ஆர்.ஓ., பிளான்ட்: நிதி வீணடிப்பு

முதுகுளத்துார் அருகே செயல்படாத ஆர்.ஓ., பிளான்ட்: நிதி வீணடிப்பு

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே சடையனேரி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆர்.ஓ., பிளான்ட் மூன்றாண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் காட்சிப்பொருளாக இருப்பதால் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது.சடையனேரி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக 2018 -19ம் நிதியாண்டில் மாநில நிதிக் குழு மானியம் ரூ.7.98 லட்சத்தில் ஆர்.ஓ., பிளான்ட் அமைக்கப்பட்டது.தற்போது வரை கடந்த மூன்றாண்டுகளுக்கு செயல்படாமல் உள்ளது. கிராம மக்கள் குடிநீர் வசதியின்றி சிரமப்படுகின்றனர். பா.ஜ., கிழக்கு ஒன்றிய தலைவர் மோகன்தாஸ் கூறியதாவது:சடையனேரி கிராமத்தில் 2019ல் புதிதாக ஆர்.ஓ., பிளான்ட் கட்டப்பட்டது. அன்று முதல் தற்போது வரை செயல்படவில்லை.பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. கிராமத்தில் காவிரி குடிநீர் வசதி இல்லாமலும் மக்கள் சிரமப்படுகின்றனர். இதனால் குடம் தண்ணீர் ரூ.12க்கு விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவலநிலை உள்ளது.ஆர்.ஓ., பிளான்ட் செயல்படாமல் காட்சிப்பொருளாக இருப்பதால் அரசின் நிதியும் வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே கிராம மக்களின் நலன் கருதி குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கட்டப்பட்டுள்ள ஆர்.ஓ., பிளான்டை பராமரித்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி