உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெருநாழி பஸ் ஸ்டாண்ட் அருகே ரோடு சேதம்

பெருநாழி பஸ் ஸ்டாண்ட் அருகே ரோடு சேதம்

பெருநாழி : -பெருநாழி பஸ் ஸ்டாண்டில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் அரை கி.மீ., தொலைவிலான சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.கடந்த 2012ல் அமைக்கப்பட்ட தார் ரோடு 5 ஆண்டுகளில் சேதமடைந்ததால் அவ்வழியாக பஸ் ஸ்டாண்டிற்கு வரக்கூடிய வாகனங்கள் பஸ்கள் குண்டும் குழியுமான ரோட்டில் பயணம் செய்கின்றனர்.டூவீலர் ஓட்டிகள் அடிக்கடி அப்பகுதியில் விழுந்து காயமடைகின்றனர். எனவே கமுதி ஒன்றிய நிர்வாகத்தினர் புதிய தார் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ