உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரோடு சேதம்; 13 ஆண்டுகளாக பஸ் போக்குவரத்து இல்லை; உச்சிநத்தம் -வி.சேதுராஜபுரம் வரை

ரோடு சேதம்; 13 ஆண்டுகளாக பஸ் போக்குவரத்து இல்லை; உச்சிநத்தம் -வி.சேதுராஜபுரம் வரை

சாயல்குடி : சாயல்குடி அருகே உச்சிநத்தம் முதல் வி.சேதுராஜபுரம் வரை 2 கி.மீ.,க்கு 20 ஆண்டுகளாக ரோடு சேதமடைந்துள்ளது.இதனால் உச்சிநத்தத்தில் இருந்து கொண்டுநல்லான்பட்டி, கொக்கரசன் கோட்டை, முத்துராமலிங்கபுரம், வாலம்பட்டி, காடல்குடி வழியாக விளாத்திகுளம் செல்லும் அரசு பஸ் சேவை நிறுத்தப்பட்டது. பா.ஜ.,வை சேர்ந்த உச்சிநத்தம் முத்துவல்லாயுதம் கூறியதாவது: இங்கு 2 கி.மீ.,க்கு ரோடு முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் கனரக வாகனங்கள் டூவீலர்ஓட்டிகள் செல்லும் போது சிரமத்தை சந்திக்கின்றனர். இந்த ரோட்டின் வழியாக மூன்று பாலங்கள் உள்ளது. அவற்றில் ஒரு பாலம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பழுது பார்க்கப்பட்டது. மீதமுள்ள இரண்டு பாலங்களும் சேதமடைந்துள்ளது. ஒவ்வொரு மழைக்காலங்களிலும் சுற்றுவட்டாரத்தில் பத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் யூனியன் அலுவலர்கள் வருவாய்த்துறையினர் முறையாக ஆய்வு செய்து குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். கடந்த 13 ஆண்டுகளாக ரோடு சேதமடைந்ததால் இப்பகுதி வழித்தடத்தில் இயங்கிய அரசு பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை