சாலையோர மணல் குவியலால் வாகனங்கள் விபத்து அபாயம்
ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் நெடுஞ்சாலையோரத்தில் குவிந்துள்ள மணலால் வாகனங்கள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளது.ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் நெடுஞ்சாலையில் சாலையோரங்களில் இரு புறமும் மணல் குவியல்கள் உள்ளன. இதில் வாகனங்கள் செல்லும் நிலையில் சறுக்கி விழும் நிலை உள்ளது. போக்குவரத்து மிகுந்த பகுதி என்பதால் வாகனங்கள் விபத்துக்களில் சிக்கும் போது உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையோர மணல் குவியலை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.