ரோட்டரி சங்க பதவியேற்பு விழா
ராமநாதபுரம்; ராமநாதபுரம் கோரல் சிட்டி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. சிறந்த சேவையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.ராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லுாரியில் கோரல் சிட்டி ஆப் ராம்நாடு ரோட்டரி கிளப் நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.இதில் மாவட்ட கவர்னர் தினேஷ்பாபு தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சின்னதுரை அப்துல்லா பங்கேற்றார். கவர்னர் சோமசுந்தரம் புதிய உறுப்பினர்களை அறிமுகம் செய்து வரவேற்றார்.புதிய நிர்வாகத்தில் தலைவராக மாரி, செயலாளராக அல்அமீன்சாதிக் பதவியேற்றனர். நிகழ்ச்சியில் சிறந்த சமூக சேவையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. சிறந்த மக்கள் சேவையாளராக தாய்பாசம் அறக்கட்டளை பாதுஷா நுாருல் அகமது, சிறந்த பசுமையாளராக எஸ்.எஸ்.ஐ., சுபாஷ் சீனிவாசன், சிறந்த சேவையாளராக போக்குவரத்து எஸ்.ஐ., விக்னேஷ்வரன் ஆகியோருக்கு விருது வழங்கினர். கோரல் சிட்டி ரோட்டரி கிளப்பின் தலைவர் அன்னபூர்ணா, செயலாளர் வினோஜ்கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர். -