உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலத்தில் ரூ.139.52 கோடி பயிர் கடன் வழங்கல்

திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலத்தில் ரூ.139.52 கோடி பயிர் கடன் வழங்கல்

திருவாடானை திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் 33 கூட்டுறவு சங்கங்களில் ரூ.139.52 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டது. தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெறும் விவசாயிகள் உரிய தவணை தேதிக்குள் கடனை திருப்பி செலுத்துவதன் மூலம் வட்டி இல்லாத பயிர் கடன் பெறலாம் என அரசு அறிவித்தது. திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் உள்ள 33 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு 2024-25 நிதியாண்டியில் வட்டியில்லா பயிர் கடன் வழங்கும் பணிகள் துவங்கியது.விவசாயிகள் அருகில் உள்ள கூட்டுறவு சங்கங்களை அணுகி பட்டா, சிட்டா நகல், அடங்கல், கூட்டுறவு வங்கி கணக்கு எண், ஆதார் நகல், இரண்டு போட்டோக்களை கொடுத்து விண்ணப்பித்து வந்தனர். கடந்த ஆண்டு மூவிதழ் அடங்கலுக்கு மட்டுமே கடன் வழங்கப்பட்டது. வெள்ளை அடங்கலுக்கு கடன் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து செய்தி தினமலர் நாளிதழில் வெளியானதால் வெள்ளை அடங்கலுக்கும் பயிர் கடன் வழங்கலாம் என கூட்டுறவு அதிகாரிகள் அறிவித்தனர். இதனால் விவசாயிகள் ஆர்வமாக விண்ணப்பித்தனர். இது குறித்து கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கூறியதாவது:திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் ரூ.139.52 கோடி பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது.இதில் தும்படைக்காகோட்டை சங்கத்தில் ரூ.8.28 கோடி வழங்கி முதலாவதாகவும், ஆண்டாவூரணி சங்கத்தில் ரூ.6.86 கோடி வழங்கி இரண்டாவதாகவும், தொண்டி சங்கத்தில் ரூ.6.18 கோடி வழங்கி மூன்றாவது இடத்திலும் உள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ