ராமேஸ்வரத்தில் ரூ.29 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்
ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ரூ.29 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் நொச்சிவாடி மடத்தில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பிடித்து உலர்த்தி மூடையில் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையின் பறக்கும் படையினருக்கு தகவல் சென்றது. பறக்கும் படையினர் அப்பகுதியிலுள்ள வீடுகளை சோதனையிட்டனர். அப்போது ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 290 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய ராமேஸ்வரத்தைச் சேர்ந்த நம்புராஜனை 45, கைது செய்தனர்.கடல் அட்டைகள் கள்ளத்தனமாக நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்தி செல்லப்படயிருந்தது தெரிய வந்தது.