இணையத்தில் இழந்த ரூ.5 லட்சம் மீட்பு
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே இளமனுார் பகுதியை சேர்ந்த இளைஞர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யலாம் என்ற போலியான விளம்பரத்தை நம்பி இணையதளத்தில் ரூ.5 லட்சத்தை இழந்துள்ளார். சைபர் கிரைம் போலீசார் இந்த பணத்தை மீட்டு ஒப்படைத்தனர்.ராமநாதபுரம் அருகே இளமனுார் பகுதியை சேர்ந்தவர் பசுபதி 27. இவர் இணையதளத்தில் வந்த விளம்பரத்தில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்கலாம் என்ற விளம்பரத்தை பார்த்து உண்மை என நம்பி இணையதளத்தில் ரூ.5 லட்சம் முதலீடு செய்துள்ளார்.முதலீடு செய்யப்பட்ட பணத்தை திருப்பி வழங்காததால் சந்தேகம் அடைந்த பசுபதி ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷிடம் புகார் அளித்தார். எஸ்.பி., சந்தீஷ் சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க உத்தரவிட்டார். போலீசார் சம்பந்தப்பட்ட இணையதளத்தில் முதலீடு செய்த 5 லட்சம் ரூபாயை முடக்கி பணத்தை திரும்ப பெற்று பசுபதியிடம் வழங்கினர்.