உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விவசாயிகளுக்கு மானிய விலையில் இயந்திரம் வழங்க ரூ.39.75 லட்சம் 

விவசாயிகளுக்கு மானிய விலையில் இயந்திரம் வழங்க ரூ.39.75 லட்சம் 

ராமநாதபுரம்:ராமநாதபுரம் வேளாண் பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு பவர் டில்லர், விசை களையெடுப்பான் வாங்கிட ரூ.39 லட்சத்து 75 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர்டில்லர் பெற அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், விசை களை எடுப்பான்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அல்லது கருவியின் மொத்த விலையில் 50 சதவீதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை சிறு, குறு, ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இதர விவசாயிகளுக்கு இயந்திரத்தின் விலையில் 40 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் நடப்பு 2025--26 நிதியாண்டில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முதல் தவணையாக ரூ.39 லட்சத்து 75 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஆதிதிராவிடர், பழங்குடியினர் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் நடைமுறையில் உள்ள 50 சதவீதம் மானியத்துடன் கூடுதலாக 20 சதவீதம், பொது பிரிவை சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு 10 சதவீதம் கூடுதல் மானியம் வழங்கப்படுகிறது.மேலும் விபரங்களுக்கு வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர்கள் ராமநாதபுரம் - 86102 03117, பரமக்குடி, நயினார்கோவில், முதுகுளத்துார், போகலுார், கமுதி, கடலாடி வட்டார விவசாயிகள் 96553 04160 ஆகிய அலைபேசி எண்களில் அல்லது நேரடியாக அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை