மேலும் செய்திகள்
கண்மாய் குளங்களில் குறைந்து வரும் தண்ணீர்
12-Jun-2025
ஆர்.எஸ்.மங்கலம்: தொடர் வறட்சியால் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் தண்ணீர் வற்றியதால் கிரிக்கெட் விளையாட்டு மைதானமாக மாறி உள்ளது.தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாய், நாரை பறக்க முடியாத 48 குருச்சிகளைக் (கிராமங்களை) கொண்ட கண்மாய் என்ற சிறப்பு பெயருடன் அழைக்கப்படுவது ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய். இந்த கண்மாயில் மழைக் காலங்களில் தேக்கப்படும் 1205 மில்லியன் கன அடி தண்ணீர் மூலம் 12 ஆயிரத்து 142 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகின்றன.மொத்தம் 19.80 கி.மீ, நீண்ட கரைப் பகுதியை கொண்ட இந்த கண்மாயிலுள்ள 20 பாசன மடைகள் மூலம் விவசாய நிலங்கள் பயனடைகின்றன.இந்நிலையில் கண்மாயில் தேங்கியிருந்த தண்ணீரை பயன்படுத்தி பெரிய கண்மாய் கீழுள்ள பாசன விவசாயிகள் ஜன., மாதத்தில் கோடை நெல் மற்றும் சிறுதானியங்கள் சாகுபடி செய்தனர்.சில மாதங்களாக தொடர்ந்து நிலவும் கடும் வறட்சியாலும், கோடை விவசாயத்திற்கு தண்ணீரை பயன்படுத்தியதாலும் தற்போது கண்மாயில் தண்ணீர் வற்றி உள்ளது. இதனால் கண்மாய் பகுதி தற்போது விளையாட்டு மைதானமாக மாறி உள்ளது.விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்களும், இளைஞர்களும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகள் விளையாடும் மைதானமாக பயன்படுத்தி வருகின்றனர்.
12-Jun-2025