உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் கூட்டம்

ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் கூட்டம்

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் கவுன்சில் கூட்டம் யூனியன் தலைவர் ராதிகா தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் சேகர், ஆணையாளர் மலைராஜ் முன்னிலை வகித்தனர்.துணை முதல்வராக பொறுப்பேற்ற உதயநிதிக்கு மன்றம் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து மழைக்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.மேலும் பல்வேறு பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை நேரத்தில் ஏற்படும் மின்வெட்டை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளை மின்வாரிய அதிகாரிகள் உடனுக்குடன் சீர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ