ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா
பரமக்குடி: பரமக்குடி சுந்தர்நகரில் ராஷ்டிரீய சுவயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.,) விஜயதசமி நுாற்றாண்டு விழா கூட்டம் நடந்தது. 1925 விஜயதசமி அன்று துவங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., இந்த ஆண்டு நூற்றாண்டு விழாவை கொண்டாடி வருகிறது. இதன் தொடர்ச்சியாக பரமக்குடியில் நடந்த விழாவில் சங்க நிர்வாகி கரு.ராஜு பேசினார். அப்போது சீருடை அணிந்த தொண்டர்கள் பங்கேற்று சங்கத்தின் காவி கொடிக்கு மரியாதை செலுத்தினர். நகரச் செயலாளர் சங்கர் நன்றி கூறினார்.