பரமக்குடியில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலம்
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., சார்பில் பரமக்குடி எமனேஸ்வரத்தில் முழு சீருடை அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. எமனேஸ்வரம் வண்டியூரில் ஆர்.எஸ்.எஸ்., சங்கத்தின் காவிக்கொடி ஏந்தி கோஷ வாத்தியத்துடன் ஊர்வலம் புறப்பட்டது. டாக்டர் சிவகார்த்திகேயன் துவக்கி வைத்தார். தொடர்ந்து நயினார்கோவில் ரோடு, எமனேஸ்வரம் வீதிகளில் வலம் வந்து மீண்டும் வண்டியூரை அடைந்தது. பொதுக்கூட்டத்தில் எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபை தலைவர் டாக்டர் ஜவஹர்லால் தலைமை வகித்தார். பரமக்குடி சபை தலைவர் நாகநாதன் முன்னிலை வகித்தார். எமனேஸ்வரமுடையவர் கோயில் சிவாச்சாரியார் மீனாட்சிசுந்தரம் ஆசி வழங்கினார். ஆர்.எஸ்.எஸ்., தென் தமிழக பொறுப்பாளர் சுரேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.