உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் நவ.24 முதல் வேலைநிறுத்தம் மாவட்டத் தலைவர் தகவல்

ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் நவ.24 முதல் வேலைநிறுத்தம் மாவட்டத் தலைவர் தகவல்

பெருநாழி: கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நவ., 24 முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஊராட்சி செயலர்கள் சங்க மாவட்ட தலைவர் பெருநாழியைச் சேர்ந்த முருகன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: கிராமப்புறங்களில் துாய்மைக் காவலர்களுக்கு மாத ஊதியத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும். மக்கள் நல பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடிநீர் விநியோகிக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர் களுக்கு சிறப்பு காலமுறை ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். யூனியன் அலுவலகங்களில் 18 ஆண்டுகளாக பணிபுரியும் தேசிய வேலை உறுதி திட்ட கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய அரசாணை வெளியிட்டும் இதுவரை செயல்படுத்த வில்லை. இதை உடனடி யாக அமல்படுத்த வேண்டும். ஊராட்சி செயலர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து பதிவறை எழுத்தர்களுக்குரிய அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி மூன்று கட்டங் களாக போராட்டம் நடத்துவது என திருச்சியில் நடந்த அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு மாநாட்டில் முடிவு செய்துள்ளோம். அதன்படி வருகிற செப்., 24ல் மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டம், அக்., 29ல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்த உள்ளோம். அப்போதும் எங்களது கோரிக்கையை அரசு கண்டுகொள்ளவில்லை என்றால் நவ., 24 முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடு படுவோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை