உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநாடு துவக்கம்: கலெக்டர் ரத்த தானம்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநாடு துவக்கம்: கலெக்டர் ரத்த தானம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில மாநாட்டை துவக்கி வைத்து கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ரத்த தானம் செய்தார்.ராமநாதபுரம் அருகே தனியார் மகாலில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில மாநாடு பிப்.,20,21 ஆகிய இருநாட்கள் நடக்கிறது. மாநாட்டை நேற்று கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் துவக்கி வைத்து ரத்த தான முகாமில் பங்கேற்று ரத்த தானம் செய்தார். கூடுதல் கலெக்டர் வீர்பிரதாப் சிங், அலுவலர்கள் ரத்த தானம் செய்தனர். இதில் உடல் தானம் செய்வதாக விண்ணப்பம் செய்தவர்கள், ரத்த தானம் செய்தவர்களுக்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கினார். சங்கத்தின் மாநிலத் தலைவர் ரமேஷ், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் விஜயகுமார், மாநிலச் செயலாளர் சோமசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர். இன்று (பிப்.21ல்) மாலை ஊர்வலம், பொதுக்கூட்டம் ராமநாதபுரம் சந்தை திடலில் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை