பாய்மரப்படகு போட்டி
திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே முள்ளிமுனை கடற்கரை மாரியம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பாய்மரப் படகு போட்டி நடந்தது. 24 படகுகள் கலந்து கொண்டன. ஒரு படகிற்கு ஆறு பேர் வீதம் பங்கேற்றனர். 7 நாட்டிகல் மைல் துாரம் எல்லையாக நிர்ணயிக்கப்பட்டது.வாண வேடிக்கையுடன் போட்டி துவங்கியது. வீரர்கள் காற்றின் வேகத்திற்கு தகுந்தவாறு படகுகளை செலுத்தினர். முதலாவதாக நம்புதாளை அம்பலம் படகும், இரண்டாவதாக ஈஸ்வரா படகும், மூன்றாவதாக தொண்டி ராமா படகும் வெற்றி பெற்றன. அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.