மேலும் செய்திகள்
படகு சவாரிக்கு ஆண்டிபாளையம் குளம் தயார்
09-Sep-2024
ஆர்.எஸ்.மங்கலம்,:ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடியில் கோயில் விழாவையொட்டி பாய்மர படகு போட்டி நடந்தது.திருப்பாலைக்குடி மாரியம்மன் கோயில் தெரு செல்வ முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி விழாவை முன்னிட்டு பாய்மரப் படகுப் போட்டி நடந்தது. 15 கடல் மைல் தொலைவு எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு நடந்த போட்டியில் 20 படகுகள் கலந்து கொண்டன.தலா ஏழு வீரர்கள் போட்டியிட்டு படகை செலுத்தினர். போட்டி துவங்கியதும் பாய்மரப் படகுகள் ஒன்றை ஒன்றை முந்தியவாறு இலக்கை நோக்கி சென்றன. இதை பார்த்து கடற்கரையில் கூடியிருந்த மக்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.போட்டியில் வெற்றி பெற்ற படகுக்கு முதல் பரிசு ரூ.40 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.30 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.20 ஆயிரம், நான்காம் பரிசு ரூ.15 ஆயிரம், ஐந்தாம் பரிசு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.
09-Sep-2024