வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ராமாஸ்வரத்தில் ஏர்போர்ட் க்கூட வரப்போகுதாம். விமானத்தையும் சேத்து தள்ள ரெடியாவுங்க.
ராமேஸ்வரம்: தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் குவிந்து கிடக்கும் மணலில் வானங்கள் சிக்குவதால் சுற்றுலாப் பயணிகள் அவதிப்படுகின்றனர். தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை, 1964 புயலில் இடிந்த சர்ச், ரயில்வே கட்டடங்களை காண தினமும் ஏராளமான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடி வருகின்றனர். இச்சாலையில் பார்க்கிங் வசதி இல்லாததால் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில மாதங்களாக வீசிய சூறாவளியால் தனுஷ்கோடி கடலோரத்தில் உள்ள மணல் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் குவிந்து கிடக்கிறது. இதனை அகற்றி விபரீதம் ஏற்படுவதை தடுக்க சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இந்த மணல் குவியலில் வாகனங்கள் சிக்குவதால், மீட்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் அவதிப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மணல் குவியலை அகற்றி போக்குவரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமாஸ்வரத்தில் ஏர்போர்ட் க்கூட வரப்போகுதாம். விமானத்தையும் சேத்து தள்ள ரெடியாவுங்க.