மணல் திருட்டு வாகனம் பறிமுதல்
திருவாடானை: டி.நாகனி ரோட்டில் வயல்காட்டில் சிலர் மணல் அள்ளும் இயந்திரம் மூலம் லாரியில் மணல் ஏற்றிக்கொண்டு இருந்தனர். திருவாடானை போலீசார் அந்தப் பகுதியில் ரோந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடினர். போலீசார் விரட்டிச் சென்று செல்வகணபதியை கைது செய்தனர். மணல் அள்ளும் இயந்திரம், டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். செலுகை நிதிஷ்வரனை தேடி வருகின்றனர்.