உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சேதுபதி நகர் மக்களுடன்  சந்தீஷ் எஸ்.பி., ஆலோசனை 

சேதுபதி நகர் மக்களுடன்  சந்தீஷ் எஸ்.பி., ஆலோசனை 

ராமநாதபுரம்: உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி., என்ற திட்டத்தில் சந்தீஷ் எஸ்.பி., சேதுபதி நகர் மக்களுடன் ஆலோசனை நடத்தினார்.ராமநாதபுரம் மாவட்டத்தில் உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி., என்ற திட்டத்தின் கீழ் முக்கியமான கிராமங்களுக்கு சந்தீஷ் எஸ்.பி., சென்று சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியான சேதுபதி நகரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சந்தீஷ் எஸ்.பி., பங்கேற்றார்.அவர் பேசியதாவது: கண்காணிப்பு கேமரா வைப்பதன் அவசியம், பொதுமக்கள் வெளியூருக்கு செல்லும் போது சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்து விட்டு செல்வதன் மூலம் பூட்டப்பட்டிருக்கும் வீடுகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்ட இரவு ரோந்து போலீசார் அப்பகுதிகளுக்கு சென்று கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ