மேலும் செய்திகள்
சர்ச் திருவிழா கொடியேற்றம்
18-Jul-2025
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் புனித சந்தியாகப்பார் சர்ச் திருவிழாவில் மும்மதத்தினரும் பங்கேற்றனர். தங்கச்சிமடம் வேர்க்காடு கிராமத்தில் உள்ள புனித சந்தியாகப்பர் சர்ச் திருவிழா ஜூலை 16ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து சர்ச் வளாகத்தில் தினமும் நற்கருணை, ஆராதனை பூஜை நடந்தது. நேற்று முன்தினம் இரவு சந்தியாகப்பர் சர்ச் வளாகத்தில் சிவகங்கை கத்தோலிக்க மறைமாவட்ட பிஷப் ஆனந்தம் தலைமையில் சிறப்பு திருப்பலி பூஜை நடந்தது. பின் அலங்கரித்த தேரில் சந்தியாகப்பர் சிலையை வைத்ததும் சர்ச் வளாகத்தில் தேர் பவனி நடந்தது. நேற்று காலை சர்ச் வளாகத்தில் சிறப்பு திருப்பலி பூஜை பாதிரியார் ஆரோக்கிய ராஜா தலைமையில் நடத்தப்பட்டு திருவிழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் ஜேம்ஸ் அமல்ராஜ், நிர்வாகிகள் செய்திருந்தனர். விழாவில் ராமநாதபுரம், துாத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பல பகுதியில் இருந்து ஏராளமான இறை மக்கள் மற்றும் மும்மதத்தினரும் பங்கேற்று அருளாசி பெற்றனர்.
18-Jul-2025