உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  கிறிஸ்துமஸ் தாத்தா வேடம்: குழந்தைகள் மகிழ்ச்சி

 கிறிஸ்துமஸ் தாத்தா வேடம்: குழந்தைகள் மகிழ்ச்சி

தொண்டி: தொண்டியில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து அனைத்து மதத்தினருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. தொண்டியில் கிறிஸ்துமஸ் விழா களைகட்டியுள்ளது. கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து அனைத்து மதத்தினருக்கும் இனிப்பு வழங்கினர். இயேசு நம்மோடு எழுப்புதல் திருச்சபை சார்பில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து முக்கிய தெருக்கள் வழியாக சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்து இனிப்புகள் வழங்கினர். சபை போதகர் சேவியர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து சென்றதை குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பார்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை