உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சிங்கனேந்தலில் பள்ளி கட்டடம் சேதம்: மாணவர்களுக்கு ஆபத்து

சிங்கனேந்தலில் பள்ளி கட்டடம் சேதம்: மாணவர்களுக்கு ஆபத்து

ராமநாதபுரம்: ராமநாதபுரம் தாலுகா மாதவனுார் ஊராட்சி சிங்கனேந்தலில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டடம் சேதமடைந்துள்ளதால் மாணவர்களுக்கு விபத்து அபாயம் உள்ளதாக பெற்றோர்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.சிங்கனேந்தலில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 17 மாணவர்கள் படிக்கின்றனர். தொடர் பராமரிப்பு இன்றி வகுப்பறை கட்டடத்தில் கூரை சேமதடைந்து கீழே விழுகிறது.இதனால் மாணவர்களின் உயிருக்கு ஆபத்துள்ளது. எனவே சேதமடைந்த வகுப்பறை சீரமைக்க வேண்டும். ஏற்கனவே ஒதுக்கிய படி நபார்டு திட்டத்தில் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும். அதற்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ