உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சந்திரகிரகணத்தை கண்டு ரசித்த பள்ளி மாணவர்கள்

சந்திரகிரகணத்தை கண்டு ரசித்த பள்ளி மாணவர்கள்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் சந்திர கிரகணத்தை பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் தொலைநோக்கி வழியாக பார்த்து ரசித்தனர். ராமநாதபுரம் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முழு சந்திரக்கிரகணத்தை காண்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ராமநாதபுரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி மாணவர்கள், அறிவியல் ஆர்வலர்கள், பொதுமக்கள் வந்து தொலைநோக்கி வழியாக சந்திர கிரகணத்தை கண்டு களித்தனர். ஆஸ்ட்ரோ கிளப் மாவட்ட செயலாளர் சொக்கநாதன் கூறியதாவது: சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி வருவதால் பூமியின் நிழல் நிலவின் மீது விழும். இதனால் முழு சந்திரகிரகணம் ஏற்படுகிறது. இந்த சந்திர கிரகணத்தை காப்பர் மூன் என அழைக்கலாம். ஏனென்றால் சூரிய ஒளி பூமியின் மீது பட்டு சிதறி நிலவின் மீது விழுவதால் இளஞ்சிவப்பு நிறத்தில் நிலவு காட்சியளித்தது. தற்போது நிகழ்ந்த சந்திர கிரகணம் 80 நிமிடம் வரை நீடித்தது. இதுபோன்ற நீண்ட முழு சந்திர கிரகணத்தை காண்பது அரிது. அடுத்ததாக 2028 ல் இத்தகைய நிகழ்வு ஏற்படும். அதனால் இந்த அரிய நிகழ்வை பொது மக்களிடம் கொண்டு செல்ல மாவட்ட அளவில் ஆஸ்ட்ரோ கிளப் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 200 க்கும் மேற்பட்டோர் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டு இரவு 12:00 மணி வரை சந்திரகிரகணத்தை கண்டு களித்தனர். இடையில் மேகம் மறைத்ததால் கிரகணத்தை காண முடியவில்லை. இருந்தாலும் முழு சந்திரகிரணத்தை தெளிவாக காண முடிந்தது. இதன் தொடர்ச்சியாக செப்.,21ல் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நிலவு வரவுள்ளது. அந்நாளில் சூரிய கிரகணத்தை காண முடியும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை