உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

ராமநாதபுரம்: இடைநிலை ஆசிரியர்கள் அனைவருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குமாறு 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ராமநாதபுரத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். இடைநிலை பதவி மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் நடந்த போராட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் வினோத் பாபு, முத்துசாமி, தினேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வினோத் பாபு கூறிய தாவது: தமிழகத்தில் 2009 மே 31க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.11,170 ஊதியம் வழங்கப்படுகிறது. அதற்கு பின் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ரூ.8000 வழங்கப்படுகிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கு சமமான கல்வி தகுதி, பணி இருந்தாலும் சமமான ஊதியம் வழங்கப்படுவதில்லை. இது மத்திய அரசில் பணிபுரியும் துாய்மைப் பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் களுக்கு 'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். ஊதிய முரண்பாட்டை நீக்க மூன்று நபர்கள் அடங்கிய குழு அமைத்தும் தற்போது வரை தீர்வு காணப்படவில்லை. இதில் பலர் ஓய்வுபெறும் தருவாயில் உள்ளனர்.சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி செப்., மாதம் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை