உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தேவிபட்டினம், தொண்டி கடலில் பாதுகாப்பு ஒத்திகை

தேவிபட்டினம், தொண்டி கடலில் பாதுகாப்பு ஒத்திகை

தொண்டி : தொண்டி முதல் தேவிபட்டினம் வரை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சஜாக் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர்.தேவிபட்டினம் முதல் எஸ்.பி.பட்டினம் வரை கடலோர பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. தேவிபட்டினம் எஸ்.ஐ., அய்யனார், தொண்டி எஸ்.ஐ., கதிரவன், தனிப்பிரிவு ஏட்டு இளையராஜா மற்றும் மரைன் போலீசார் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர். எஸ்.பி.பட்டினம், பாசிபட்டினம், தொண்டி, நம்புதாளை, முள்ளிமுனை, காரங்காடு, தேவிபட்டினம், திருப்பாலைக்குடி போன்ற கடலோரங்களில் ஆய்வு செய்தனர். படகில் கடலுக்குள் சென்று மீனவர்களின் படகுகளை சோதனையிட்டனர்.அந்நியர்கள் நடமாட்டம் குறித்து கண்காணித்தனர். சந்தேகப்படும் நபர்கள் குறித்து தகவல் தெரிந்தால் உடனே தெரிவிக்க வேண்டும் என்று மீனவர்களிடம் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ