உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வேளாண் தொழில் நுட்பக் கல்லுாரியில் கருத்தரங்கம்

வேளாண் தொழில் நுட்பக் கல்லுாரியில் கருத்தரங்கம்

கமுதி: கமுதி அருகே பேரையூரில் நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் சிறப்பாக பேசிய மாணவர்களுக்கு விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் பரிசுகள் வழங்கினார்.கமுதி அருகே பேரையூரில் நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் நிலைத்த உணவு பாதுகாப்பு, வாழ்வாதாரம் மற்றும் காலநிலை மாற்றத்தை குறைக்கும் பாதை என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி தலைவர் அகமதுயாசின் தலைமை வகித்தார்.வேளாண் இணை இயக்குனர் மோகன்ராஜ், வெங்கடேஸ்வரா பல்கலை முனைவர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் திருவேணி வரவேற்றார். அப்போது காலநிலை மாற்றத்தை பற்றியும், அதனால் எதிர் கொள்ளப்போகும் பிரச்னைகளில் இருந்து எவ்வாறு மீள்வது மற்றும் தொழில் நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்று விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் எடுத்துரைத்தார்.கருத்தரங்கத்தில் சிறப்பாக பேசிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை