உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கூட்டுறவு சங்கங்களில் சேவை மையம் செயல்படவில்லை: கிராம மக்கள் அதிருப்தி

கூட்டுறவு சங்கங்களில் சேவை மையம் செயல்படவில்லை: கிராம மக்கள் அதிருப்தி

திருவாடானை : கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கும் பெரும்பாலான கூட்டுறவு சங்கங்களில் இ-சேவை மையம் செயல்படாததால் கிராம மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாக்களில் 34 கூட்டுறவு சங்கங்கள் உள்ளது. தொண்டி, வெள்ளையபுரம், நம்புதாளை, கோனேரிகோட்டை, தும்படைக்கா கோட்டை, ஆர்.எஸ்.மங்கலம், எஸ்.பி.பட்டினம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களில் இ-சேவை மையம் துவங்கப்பட்டது. இங்கு வருவாய்த்துறை சான்றிதழுக்கு விண்ணப்பிப்பது, ஆதார் திருத்தங்கள், கல்வித்துறை சார்ந்த விண்ணப்பங்கள் பதிவு செய்வது, பட்டா, சிட்டா, அடங்கல் எடுத்தல், மத்திய, மாநில அரசுகளின் சேவைகள் என ஏராளமான பணிகள் நடந்தன. ஆரம்பத்தில் செயல்பட்ட மையங்கள் தற்போது மக்களுக்கு சேவை வழங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எஸ்.பி.பட்டினம் மக்கள் கூறியதாவது:எஸ்.பி.பட்டினம் கூட்டுறவு சங்கத்தில் இ-சேவை மையம் செயல்படவில்லை. கேட்டால் இணையதள இணைப்பு கிடைப்பதில்லை சிரமமாக உள்ளது. தனியாரிடம் செல்லுங்கள் என்று தெரிவிக்கின்றனர். இதனால் பல கி.மீ., சென்று தனியார் சேவை மையங்களில் பெறுகிறோம்.தனியார் சேவை மையங்கள் பெருகி இருந்தாலும், கூட்டுறவு இ-சேவை மையங்கள் ஏழைகளுக்கு பயனாக இருந்தது. எனவே கூட்டுறவு சங்கங்களில் இ-சேவை மையம் செயல்பட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.கூட்டுறவு சங்க அதிகாரிகள் கூறுகையில், 10 கூட்டுறவு சங்கங்களில் மட்டும் இ-சேவை மையம் செயல்படாமல் உள்ளது. அந்த சங்கங்களில் உள்ள பிரச்னைகளை கண்டறிந்து, அவற்றை சரி செய்து பொதுமக்களுக்கு தொடர் சேவை அளிப்போம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ