வெறிநாய் கடித்த மாடு முட்டி பலர் காயம்: அதிர்ச்சியில் மக்கள்
பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சுற்றித்திரியும் வெறிநாய்கள் கடித்த காளை மாடு தெருவில் செல்வோரை எல்லாம் முட்டியதில் பலர் காயமடைந்தனர்.பரமக்குடியில் பசு மாடுகளை வளர்ப்போர் உணவிற்காக அவற்றை தெருக்களில் திரிய விடுகின்றனர். வேந்தோணி விலக்கு ரோடு, நெடுஞ்சாலையில் வெறி நாய் கடித்த நிலையில் சுற்றித்திரிந்த காளை பலரை முட்டியதில் காயமடைந்தனர்.அந்த மாட்டை பிடிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன், நகராட்சி பொறுப்பு சுகாதார ஆய்வாளர் மதன் உள்ளிட்டோர் வந்தனர். பின்னர் நகராட்சி ஊழியர்கள், பொதுமக்களுடன் இணைந்து மாட்டை நீண்ட போராட்டத்திற்கு பின் பிடித்துக் கட்டினர். இந்த மாடு நாய்க் கடியால் பாதிக்கப்பட்டிருந்ததால் கால்நடை மருத்துவ ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தினர்.உடனடியாக தெருக்களில் திரியும் மாடுகளை அதன் உரிமையாளர்களை பிடித்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நாய்களை கட்டுப்படுத்த உடனடி தீர்வு காண வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.