மேலும் செய்திகள்
ரோட்டில் ஓடும் கழிவு நீர்
09-May-2025
கமுதி : கமுதி பேரூராட்சி காமாட்சி செட்டியார் தெருவில் கழிவுநீர் தேங்கி இருப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர். கமுதி பேரூராட்சி 5வது வார்டுக்கு உட்பட்ட காமாட்சி செட்டியார் தெருவில் கழிவுநீர் கால்வாய் வசதி உள்ளது. இங்கு கால்வாய் துார்வாரப்படாததால் அடைப்பு ஏற்பட்டு சில நாட்களாக கழிவுநீர் செல்ல வழியில்லாமல் மக்கள் நடந்து செல்லும் ரோட்டில் குளம்போல் தேங்குகிறது.இதனால் மக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. எனவே கமுதி பேரூராட்சி நிர்வாகத்தினர் கழிவுநீர் கால்வாயை துார்வாரி தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
09-May-2025