சிக்கல் ரோடுகளில் குளம்போல் தேங்கும் கழிவுநீர் ரோட்டில் குளம்போல் தேங்குது
சிக்கல்: சிக்கல் நகரில் வடக்கு தெரு, கிழக்கு தெரு, தெற்கு தெரு, பள்ளிவாசல் தெரு,, யாதவர் தெரு, மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட தெருக்களில் கழிவு நீர் வடிகால் வசதி அமைக்கப்படவில்லை. இதனால் கழிவுநீர் தெருக்களில் தேங்குவதாக மக்கள் வேதனை தெரிவித்தனர்.மார்க்சிஸ்ட் கம்யூ., தாலுகா செயலாளர் அம்ஜத்கான்: நகரில் 6000 மக்களுக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.ஒவ்வொரு தெருக்களிலும் வாறுகால் வசதி செய்து தரப்படவில்லை. வீடுகளுக்கு முன் நான்கடி ஆழத்திற்கு சாக்கடை உறைகுழி தொட்டி அமைத்துள்ளனர். இதனால் கழிவுநீர் வெளியேறி ரோட்டில் குளம் போல் தேங்குகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் ஏற்படுகிறது.எனவே பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வீடுகள் மற்றும் தெருக்களில் கழிவுநீர் வாறுகால வசதி அமைக்க கடலாடி யூனியன் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது என்றார்.