உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி புது நகரில் காணாமல் போகும் கழிவுநீர் வாறுகால்கள்

பரமக்குடி புது நகரில் காணாமல் போகும் கழிவுநீர் வாறுகால்கள்

பரமக்குடி: பரமக்குடி நகராட்சி புது நகரில் வாறுகால்கள் கட்டப்பட்ட நிலையில் காணாமல் போய் வருவதால் பல லட்சங்கள் நிதி வீணடிக்கப்படுவதாக மக்கள் கேள்வி எழுப்பினர்.பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட புதுநகர் உருவாகி 25 ஆண்டுகள் ஆகிறது. தொடர்ந்து மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக இப்பகுதி தனி வார்டாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் புது நகரில் குறிப்பிட்ட தெருக்களைத் தவிர மற்றவை அரசின் நிபந்தனைக்கு உட்படாமல் கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நகராட்சியால் ரோடு, வாறுகால் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு தான் நகராட்சி குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டது. இங்கு ஒவ்வொரு முறையும் அமைக்கப்படும் ரோடுகளும் உடைந்து வருகிறது. இதேபோல் கழிவு நீர் வாறுகால் ஒவ்வொரு தெருக்களின் மேடு பள்ளங்களை கணக்கிடாமல் கான்கிரீட் மூலம் கட்டி உள்ளனர். தொடர்ந்து ஒவ்வொரு தெருக்களையும் இணைக்கும் இடத்தில் கல்வெட்டு பாலங்கள் போடப்பட்டது. ஆனால் கழிவு நீர் கடக்க முடியாமல் உள்ளதுடன் வீடுகளை கட்டுவோரும் இதனை பொருட்படுத்தாமல் வீணாக்கி வருகின்றனர். மேலும் கனரக வாகனங்கள் செல்வதால் கல்வெட்டு பாலங்கள் பல இடங்களில் உடைந்து வீணாகி உள்ளது.இதனால் பல லட்சங்கள் நிதி வீணடிக்கப்படும் நிலையில் வாறுகால்களை முறைப்படுத்துவதுடன் சேதப்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ