சஷ்டி பூஜை
திருவாடானை: தொண்டி அருகே நம்புதாளை பாலமுருகன், ஆந்தகுடி சுப்பிரமணியர் கோயில்களில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடந்தது. சிறப்பு அபிேஷகங்கள் நடந்தன. பக்தர்கள் கந்தசஷ்டி கவசம் போன்ற முருகன் பக்திப் பாடல்களை பாடினர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.