உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புகையிலை விற்ற கடைகளுக்கு சீல்

புகையிலை விற்ற கடைகளுக்கு சீல்

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சோதனையில் 4 கடைகளுக்கு சீல் வைத்து தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.ராமநாதபுரம் மாவட்டத்தில் சந்தீஷ் எஸ்.பி., உத்தரவின் பேரில் மண்டபம், வேதாளை, ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் மண்டபம் பகுதியில் 3 கிலோ 150 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் இரு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட புகையிலை சோதனை நடத்தப்படும். புகையிலை பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சந்தீஷ் எஸ்.பி., எச்சரித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை